மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் தொற்றா நோய்களைத் தடுப்பது குறித்த விரிவுரை

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகம் இராணுவ உடற்கல்விப் பயிற்சிப் பாடசாலையின் உள்ளக மைதானத்தில் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 'தொற்றா நோய்களைக் குறைத்தல்' என்ற தலைப்பில் ஒரு விரிவுரையை 2025 ஜூலை 09 அன்று ஏற்பாடு செய்தது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை நடைமுறைகளை ஊக்குவித்தல், மன அழுத்தத்தை நிர்வகித்தல் மற்றும் சரியான ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தும் இந்த அமர்வை பிரிகேடியர் (டாக்டர்) மௌரீன் விஜேவர்தன (ஓய்வு), பிரிகேடியர் ஆர்.எம்.எம் மொனராகலை யூஎஸ்பீ மற்றும் மேஜர் ஏ.எஸ்.கே உடுகம ஆகியோர் நடத்தினர்.