2nd August 2025
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கு மூன்று நாள் பட்டறை 2025 ஜூலை 29 முதல் 31 வரை மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தில் நடைபெற்றது.
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பயிற்றுவிப்பாளர்களின் திறனை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இந்தப் பட்டறை நடத்தப்பட்டது.
சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் பணிப்பாளர் கேணல் கே.ஏ.பீ குருப்பு யூஎஸ்பீ அவர்கள் இந் நிகழ்வில் நன்றியுரை ஆற்றியதுடன் மனித உரிமைகள் தரங்களை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் இலங்கை இராணுவத்தின் பங்கை வலியுறுத்தினார்.
சான்றிதழ் வழங்கும் விழாவுடன் பட்டறை நிறைவடைந்தது. எட்டு அதிகாரி பயிற்றுனர்கள் மற்றும் பதினைந்து சிப்பாய் பயிற்றுனர்கள் பட்டறையில் பங்கேற்றனர்.