மாத்தறை மஹாநாம பாலத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை படையினர் மீட்பு

2025 ஜூலை 10 அன்று மாத்தறை மஹாநாம பாலத்தில் இருந்து குதித்து 94 வயது முதியவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 3வது கெமுனு ஹேவா படையணி படையினர் அந்த நபரை மீட்டு, உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸ் நிலையம் மேற்கொண்டு வருகிறது.