7th August 2025
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஓகஸ்ட் 06 ஆம் திகதி பனாகொடை இராணுவ உடற்பயிற்சி பாடசாலையில் மாற்றுத்திறனாளி வீரர்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்தார். இந்த நிகழ்ச்சி முன்னாள் போர்வீரர் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் நடைப்பெற்றது.
வருகை தந்த இராணுவத் தளபதியை, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் முன்னாள் போர்வீரர் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர் ஆகியோர் மரியாதையுடன் வரவேற்றார்.
பின்னர், நிகழ்வின் அடையாளமாக இராணுவத் தளபதி அபிமன்சல 2 நலவிடுதிக்கு வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கினார். இந்த நன்கொடை, அபிமன்சல 2 நலவிடுதியில் வசிக்கும் போர் வீரர்களின் நலனுக்காகவும் அன்றாட பயன்பாட்டிற்காகவும், அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க அவர்களின் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.