1st July 2025
மாற்றுத்திறனாளி போர் வீரர் குழுவினர் 2025 ஜூன் 28 அன்று 59 வது காலாட் படைப்பிரிவு பிரதேசதிற்கு விஜயத்தை மேற்கொண்டனர். அவர்களின் மன உறுதியை உயர்த்துவதையும் அவர்களின் அன்றாட வழக்கத்திலிருந்து புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தை ஏற்படுத்தும் நிமித்தம் இந்த சிறப்பு பயணம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
இவ் விஜயத்தின் போது, குழுவினர் புதுக்குடியிருப்பு போர்வீரர் நினைவுதூபிக்கு அஞ்சலி செலுத்தியதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழி, நீச்சல் தடாகம் மற்றும் வட்டுவாகல் பாலம் போன்ற வரலாற்று இடங்களை பார்வையிட்டனர்.
நாயாறு கடற்கரையில் உள்ள கிரீன் ஜாக்கெட் சுற்றுலா விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்வு மற்றும் மதிய உணவோடு சுற்றுலா நிறைவடைந்தது.
இந்த நிகழ்வு 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 593 மற்றும் 591 வது காலாட் பிரிகேட் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.