26th July 2025
மாலைத்தீவு குடியரசின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் ஹசன் அமீர் அவர்கள் 2025 ஜூலை 23 ஆம் திகதி குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டு, குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் தற்போது துப்பாக்கி சூட்டு பயிற்சியில் கலந்து கொண்டுள்ள இரண்டு மாலைத்தீவு பாதுகாப்புப் படை வீரர்களான சார்ஜன் ஹுசைன் பஷீன் மற்றும் சார்ஜன் அஷாம் அகமது ஆகியோரின் பயிற்சி முன்னேற்றம் மற்றும் நிர்வாக விடயங்களை ஆய்வு செய்தார்.
இலங்கை இராணுவத்தின் வருடாந்த பயிற்சித் திட்டத்தின் கீழ் நடாத்தப்படும் இந்தப் பாடநெறி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களை ஒருங்கிணைத்து, துப்பாக்கி சூட்டு தந்திரோபாயங்கள் மற்றும் துல்லியமான குறிபார்க்கும் திறனை மேம்படுத்துகிறது.
இந்த விஜயத்தின் போது, பாதுகாப்பு ஆலோசகருக்கு பாடநெறியின் உள்ளடக்கம், பயிற்சி நுட்பங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயிற்சியாளர்களின் செயற்திறன் குறித்து விளக்கப்பட்டது. அவர் பயிற்றுனர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடியதுடன், குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலைக் குழுவின் தொழில்முறை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் அவர்களின் பங்கைப் பாராட்டினார்.