மாலைத்தீவில் நடைபெற்ற சர்வதேச போர்வீரர்கள் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ வீரர் தனது திறமைகளை வெளிபடுத்தல்

6 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் ஓய்வுபெற்ற படைவீரர் எம்.ஜீ.ஆர்.எம்.என்.பீ.எஸ். குமார 2026 மே 07 முதல் 09 வரை மாலைத்தீவின் மாலேவில் நடைபெற்ற 2 வது சர்வதேச போர்வீரர்கள் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்றார்.

சாம்பியன்ஷிப் போட்டியின் போது, அவர் 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் போட்டி, ஈட்டி எறிதல் மற்றும் 100 மீட்டர், 400 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் ஐந்து வெள்ளிப் பதக்கங்களை வென்றார். மேலும், அவர் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.