28th July 2025
இலங்கை குத்துச்சண்டை சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட லேடன் கோப்பை குத்துச்சண்டை போட்டி, 2025 ஜூலை 20, 21, 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் கொழும்பு ரோயல் கல்லூரி உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் 25 விளையாட்டுக் கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 92 ஆண் மற்றும் 42 பெண் வீர வீராங்கனைகள் பங்கேற்றனர். இராணுவ ஆண்கள் அணி 10 எடைப் பிரிவுகளில் 07 தங்கப் பதக்கங்களையும், 01 வெள்ளிப் பதக்கத்தையும், 02 வெண்கலப் பதக்கங்களையும் வென்று, ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. மேலும், இராணுவ சிவப்பு அணி 01 தங்கப் பதக்கம், 02 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று, பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதற்கமைய, ஆண்கள் அணி கூட்டாக 08 தங்கப் பதக்கங்கள், 02 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 08 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று இராணுவத்திற்குப் பெருமை சேர்த்தது.
ஒன்பது வீராங்கனைகளைக் கொண்ட இராணுவ மகளிர் அணி, 02 தங்கப் பதக்கங்கள், 04 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களை வென்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இப்போட்டியில் இராணுவத்தின் பெருமையை மேலும் உயர்த்தியது. சிறந்த தடகள வீராங்கனை விருது 54 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எம்.ஜி.எம்.டீ. தசுனிகாவுக்கு வழங்கப்பட்டது.
இராணுவ குத்துச்சண்டை குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் பீ.கே.டப்ளியூ.டப்ளியூ.எம்.ஜே.எஸ்.பி.டப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ குத்துச்சண்டை அணி வெற்றியீட்டியது.