லெபனானில் 15 வது இலங்கை படைக்குழுவின் படையினர் நாடு திரும்பல்

லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையில் உள்ள இலங்கைப் பாதுகாப்பு படை நிறுவனத்தின் 15 வது இலங்கைப் படை குழுவினர் சிறப்புமிக்க தங்கள் கடமைப் நிறைவுசெய்து 2025 ஜூலை 02 ம் திகதி நாடு திரும்பினர்.

விஜயபாகு காலாட் படையணியின் லெப்டினன் கேணல் டிடிகே விதானகே ஆர்எஸ்பீ தலைமையில் இயங்கும் 15 வது இலங்கைப் படை குழுவில் 11 அதிகாரிகள் மற்றும் 114 சிப்பாய்கள் உள்ளனர். பின்புறக் குழுவில் எட்டு அதிகாரிகள் மற்றும் நான்கு சிப்பாய்களும் கடமை ஒப்படைப்பு செயல்முறை முடியும் வரை லெபனானில் தங்கியிருப்பர்.

பிரிகேடியர் சீடி விக்ரமநாயக்க டபிள்யூவீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இணைந்து குழுவினரை அன்புடன் வரவேற்றார்.