4th July 2025
லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் பணிக்காக இலங்கைப் பாதுகாப்பு நிறுவனத்தின் 16வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவினர் வாழ்த்துகள் மற்றும் ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் 2025 ஜூலை 02, அன்று லெபனானுக்குப் புறப்பட்டனர்.
16வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 07 அதிகாரிகள் மற்றும் 114 சிப்பாய்கள், உட்பட 121 இராணுவ வீரர்களைக் கொண்டுள்ள இக் குழு கஜபா படையணியின் லெப்டினன் கேணல் வைஎஸ்எச்என்பீ சில்வா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களாலும், இயந்திரவியல் காலாட் படையணியின் லெப்டினன் கேணல் பீஎம்எஐயூ ஒபயசேன யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோர்களின் கட்டளையின் கீழ் வழிநடத்தப்படுகின்றது.
கஜபா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, இயக்க பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சிடி விக்ரமநாயக்க டபிள்யூவீ ஆர்எஸ்பீ என்டிசீ மற்றும் வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எம்கேடிபீ மாபலகம பீஎஸ்சீ மற்றும் இன்னும் சில சிரேஷ்ட அதிகாரிகள் இராணுவத் தளபதியின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும் லெபனானுக்கு அவர்களை வழி அனுப்பவும் விமான நிலையத்தில் இருந்தனர்.