கடற்படைத் தளபதி இராணுவத் தளபதியை மரியாதை நிமித்தமாக சந்திப்பு

இலங்கை கடற்படைத் தளபதியான ரியர் அட்மிரல் பி.ஏ.கே.எஸ்.பீ. பானகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, என்டிசீ, பீஎஸ்சீ, எம்.மரிடைம்போல், எம்பிஏ, எச்ஆர்எம், பீஜி பட்டபடிப்பு எச்ஆர்எம், பிஎம்எஸ், பட்டபடிப்பு எம்ஜிடி, ஏஎப்ஐஎன், ஜேபீ (முழு தீவு), அவர்கள் 2025 ஜூன் 25, அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

வருகை தந்த அவருக்கு இராணுவ மரியாதை வழங்கப்பட்டு, இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களால் மரியதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர், அவர் சிறப்பு வணக்க மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

அதன் பின்னர், வருகை தந்த கடற்படைத் தளபதி இராணுவத் தளபதியால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து குழு படம் எடுத்துகொண்டார். பின்னர் இரு பிரமுகர்களும் பரஸ்பர நலன் தொடர்பான விடயங்களை குறிப்பாக தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை வழங்கிய முக்கிய பங்குகள் தொடர்பாக கலந்துரையாடினர். சேவைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வளர்ப்பது, கூட்டு செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்துதல், மூலோபாய வளங்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் கடல்சார் மற்றும் நில அடிப்படையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

சந்திப்பின் நிறைவில், நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.