கடற்படைத் தலைமையகத்திற்கு இராணுவத் தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இன்று (2025 ஜூலை 08) கடற்படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட அவர்களை சந்தித்தார்.

கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதி, பெருமையை பிரதிபலிக்கும் மிக உயர்ந்த பாரம்பரிய சம்பிரதாய இராணுவ மரியாதை மற்றும் இலங்கை கடற்படையின் அணிவகுப்பு மரியாதையுடன் கௌரவிக்கப்பட்டார். பின்னர் கடற்படைத் தளபதி, கடற்படையின் பதவி நிலை பிரதானி மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உட்பட கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகளை வருகை தந்த இராணுவத் தளபதிக்கு அறிமுகப்படுத்தினார்.

அடுத்து, இரு படைத் தளபதிகளும் செயற்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட பாதுகாப்பு நோக்கங்கள் குறித்து கவனம் செலுத்தும் விரிவான மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட்டனர். குறிப்பாக இராணுவம் மற்றும் கடற்படை இரண்டும் நாட்டின் பாதுகாப்பு நலன்களை நிலைநிறுத்துவதில் எவ்வாறு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன என்பதை எடுத்துக்காட்டுவதாக இந்த கலந்துரையாடல் அமைந்தது.

இராணுவத் தளபதியின் இந்த உத்தியோகபூர்வ விஜயம் இலங்கையின் ஆயுதப் படைகளுக்கு இடையிலான நீடித்த பலம் மற்றும் கண்ணியமான ஒற்றுமையைக் குறிக்கிறது. சேவைகளுக்கு இடையிலான பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் கூட்டுறவு உணர்வைக் குறிக்கும் வழக்கமான நினைவுப் பரிசு பரிமாற்றத்துடன் சந்திப்பு முடிவடைந்தது.

புகைப்படம்: