30th September 2025
ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள இராணுவத்தின் 76 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புனித கதிர்காமம் கோவில் மற்றும் கிரிவெஹெர விகாரை வளாகத்தில் 2024 செப்டெம்பர் 29 ஆம் திகதி சமய நிகழ்வு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் பங்கேற்புடன் நடைப்பெற்றது.
கிரிவெஹர விகாரையின் தலைமை பிக்கு வண. கொபவக்க தம்மிந்த தேரர் பௌத்த சமய வழிபாடுகளை முன்னெடுத்தார். பின்னர் மகாசேன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றதுடன் அதன் பின்னர் கொடி ஏந்தியவர்கள் வண்ணமயமான உடையணிந்து கதிர்காம கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்று மேலும் மத அனுஷ்டானங்களில் ஈடுப்பட்டனர்.
இந் நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, முதன்மை பணிநிலை அதிகாரிகள், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.