கொக்காவில் நடைபெற்ற கெப்டன் சாலிய அலதெனிய பீடபிள்யூவீ இன் நினைவஞ்சலி

இலங்கை சிங்க படையணியின் கெப்டன் சாலிய அலதெனிய பீடபிள்யூவீ அவர்களின் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு 2025 ஜூலை 11, அன்று கொக்காவில் நடைபெற்றது. இது அவரது தியாகத்தையும், 1990 ஜூலை 11 அன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக கொக்கவில் முகாமைப் பாதுகாத்த அவரது சக வீரர்களையும் கௌரவிக்கும் முகமானதாகும்.

பிரிட்டிஷ் விக்டோரியா சிலுவைக்கு சமமான இலங்கையின் மிக உயர்ந்த இராணுவ கௌரவமான பரம வீர விபூஷணத்தை பெற்ற முதல் வீரராக கெப்டன் அலதெனிய தனது படைகளுடன் தனது நிலைப்பாட்டைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் வீரத்திற்கு ஒரு வரலாற்று உதாரணத்தை உருவாக்கினார்.

முழு இராணுவ மரியாதையுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், வீரமரணம் அடைந்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 59 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.