5th September 2025
போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் ஏற்பாட்டில் கலை மற்றும் இலக்கியப் போட்டிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025 செப்டெம்பர் 04 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ, சீடிஎப், என்டியூ, பீஎஸ்சீ, ஐஜீ அவர்கள், இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி சுவேந்திரினி திஸாநாயக்க அவர்களுடன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்றார்.
இந்த விருது வழங்கும் விழா “தூய இலங்கை” திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது. இதில் நலவிடுதியில் வசிக்கும் போர் வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் வீரமரணம் அடைந்தோரின் பிள்ளைகளுக்கான கலை மற்றும் இலக்கியப் போட்டியும் இடம்பெற்றது. போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி, திறமைகளை அடையாளம் காணவும், கலை வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பங்கேற்பாளர்களின் நம்பிக்கையை ஊக்குவித்து, அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்துகிறது.
முறையான நிகழ்வுகள் போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூஎஎஸ்ஆர் விஜேதாச டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வரவேற்பு உரையுடன் தொடங்கின.
பின்னர் பிரதம அதிதி மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள், 47 வெற்றியாளர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கினர். மேலும், பாரம்பரிய நடனங்கள் நிகழ்விற்கு வண்ணமும் உற்சாகமும் சேர்த்தன.
நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்து, பின்னர் தேநீர் விருந்தும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் போர் வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.