கஜபா படையணி ஸ்தாபக தந்தை மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் 33 வது நினைவு தினம்

கஜபா படையணி, அதன் ஸ்தாபக தந்தையான மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் 33 வது நினைவு தினம் படையணி படைத்தளபதியும் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்பு மற்றும் ஆதரவுடன் 2025 ஆகஸ்ட் 8 ஆம் திகதி கொண்டாட்டப்பட்டது.

நிகழ்வு கிரிபத்கொடையில் உள்ள மறைந்த ஜெனரலின் உருவ சிலைக்கு, படையணி படைத்தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மலர் அஞ்சலி செலுத்தி, அவரது சிறப்புமிக்க சேவை மற்றும் தியாகத்தை கௌரவிப்பதன் மூலம் ஆரம்பமாகியது.

மறைந்த தலைவருக்கு ஆசீர்வாதங்கள் மற்றும் புண்ணியங்கள் வழங்கும் நோக்குடன் ருவன்வெலி மகாசாய, களனி ராஜமகா விஹாரை மற்றும் பனாகொட போதிராஜராமய ஆகிய இடங்களில் மத அனுஷ்டானங்கள் நடத்தப்பட்டன, இதற்கு இணையாக, சாலியபுராவில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பிள்ளைகள் மற்றும் ஊழியர்களுக்கு உணவு வழங்கும் ஒரு தொண்டு நிகழ்ச்சியை படையணி நடத்தியதுடன், இது ஒரு தகுதிச் செயலாகவும், சமூக நலனுக்கான அதன் அர்ப்பணிப்பை நிரூபிக்கும் விதமாகவும் இருந்தது.

கஜபா படையணி தலைமையகத்தில் உள்ள ஸ்தாபக தந்தையின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தலிடன் நினைவு நிகழ்வுகள் நிறைவடைந்துடன் அங்கு இலங்கை இராணுவத்திற்குள் தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் தொடர்ந்து ஊக்குவிக்கும் ஒரு தலைவருக்கு படையணியின் அனைத்து அதிகாரிகளும் சிப்பாய்களும் மரியாதை செலுத்தினர்.