4th August 2025
2025 ஏப்ரல் 28 முதல் ஓகஸ்ட் 01 வரை மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நடத்தப்பட்ட கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வனப்போர் யுத்திகள் அதிகாரிகள் பாடநெறி எண்-35, வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் கேஎல்ஐ. கருணாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள், நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இறுதி உரை நிகழ்த்தினார்.
இந்த பாடநெறியில் இலங்கை இராணுவத்தில் 22, கடற்படை 2, விமானப்படை 2 மற்றும் இந்திய இராணுவம், பாகிஸ்தான் இராணுவம், பங்களதேஷ் இராணுவம், மாலைத்தீவு தேசிய பாதுகாப்பு படை மற்றும் சீன இராணுவத்தைச் சேர்ந்த 5 அதிகாரிகள் உட்பட 31 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கை பீரங்கி படையணியைச் சேர்ந்த கெப்டன் எச்ஜீஜேகேடி பத்திராஜா பாடநெறியின் சிறந்த மாணவ அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.