16th July 2025
பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடமான திம்புலாகல வன மடாலயத்திற்கு கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ. பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள் 2025 ஜூலை 09 அன்று விஜயம் செய்தார்.
இந்த விஜயத்தின் போது, சிரேஷ்ட அதிகாரி திம்புலாகல வன மடாலயத்தின் தலைமை தேரரான அதி வண. திம்புலாகல ராஹூலலங்கார நாயக்க தேரரை சந்தித்து அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றார்.
அதன்பின்னர், சிரேஷ்ட அதிகாரி விகாரை வளாகத்தை பார்வையிட்டதுடன் உட்கட்மைப்பை மேம்படுத்துவதற்காக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.