9th May 2025
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் மாதுருஓயாவில் உள்ள இலங்கை இராணுவ விஷேட படையணி பயிற்சி பாடசாலையில் இன்று (09) நடைபெறவிருந்த பயிற்சி விடுகை அணிவகுப்பு விழாவின் போது ஏற்பட்ட வானுார்தி விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்களின் நலன் விசாரிக்க பொலன்னறுவை பொது மருத்துவமனைக்கு இன்று (09) விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி, வீரர்களுக்குத் தேவையான மேலதிக சிகிச்சைகள் குறித்து மருத்துவமனை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.