23rd April 2026
ஜப்பானின் கசுமிகௌராவில் 2026 ஏப்ரல் 19 அன்று நடைபெற்ற பார்வையற்றோருக்கான மரதன் போட்டியில் 12 வது இடத்தைப் பிடித்த கஜபா படையணியின் சிப்பாய் ஆர்.டபிள்யூ.வீ. பியதிஸ்ஸவை இராணுவ தலைமையகத்தில் 2026 ஏப்ரல் 23 அன்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பாராட்டினார்.
அவர் அந்தப் பந்தயத்தை 5 மணி நேரம், 37 நிமிடங்கள், 37 வினாடிகளில் நிறைவு செய்தார்.
ஒட்டுசுட்டானில் இராணுவப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது நடந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்ததால் அவர் தனது பார்வையை இழந்தார். அவர் தற்போது அபிமான்சல 2 நலவிடுதியில் நோயாளியாக மருத்துவப் பராமரிப்பில் உள்ளார்.