இராணுவத்தினருக்கு சட்டவிரோத பிரமிட் முதலீடு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

சட்டவிரோத பிரமிட் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு 2025 ஜூலை 24 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவ ஒழுக்க பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்பட்டது. இந்த திட்டம் பயிற்சி பணிப்பகத்தின் உதவியுடன் ஒழுக்க பணிப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த செயலமர்வு இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள் குழுவினால் நடாத்தப்பட்டது. இக்குழுவில் திருமதி அஜானி லியனபட்டபெண்டி (பணிப்பாளர் - நிதி நுகர்வோர் உறவுகள் துறை), திரு. சத்துர ஆரியதாச (பணிப்பாளர் - பிராந்திய மேம்பாட்டுத் துறை), திரு. யமித்ர ரணவீர (துணை பணிப்பாளர்- நிதி நுகர்வோர் உறவுகள் துறை) மற்றும் திரு. கிம்ஹான் மொஹோட்டி (சிரேஷ்ட உதவி பணிப்பாளர் - கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுத் துறை) ஆகியோர் அடங்குவர்.

காலை 0900 மணி முதல் பிற்பகல் 1230 மணி வரை விரிவுரை நடைபெற்றது. பிரமிட் முதலீட்டு நடவடிக்கைகள், அவற்றின் வழிமுறைகள் மற்றும் இந்த திட்டங்களால் தனிநபர்கள் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் தாக்கம் தொடர்பான ஆழமான பகுப்பாய்வை வழங்கியது.

முதலாம் படை, பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள், படைப்பிரிவுகள் மற்றும் பிரிகேட்கள், அனைத்து படையணி தலைமையகங்கள் மற்றும் இராணுவ/படையலகு பயிற்சி பாடசாலைகள் உட்பட அனைத்து இலங்கை இராணுவ நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 382 அதிகாரிகள் இத்திட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும், நாடு முழுவதும் உள்ள மேற்கூறிய நிறுவனங்களிலிருந்து 1,391 அதிகாரிகள் மற்றும் 20,482 சிப்பாய்கள் மெய்நிகர் முறையில் பங்கேற்றனர்.