இராணுவத்தினரால் உளவியல் ஆரோக்கியம் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த செயலமர்வு

‘ஆயுதப் படை உறுப்பினர்களிடையே உளவியல் ஆரோக்கியம் மற்றும் தற்கொலை முயற்சிகளைத் தடுத்தல்’ என்ற தலைப்பில் மூன்று நாள் செயலமர்வு 2025 ஒக்டோபர் 21 முதல் 23 வரை கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தில் நடத்தப்பட்டது.

இராணுவ நோய் தடுப்பு மருந்து மற்றும் மனநல சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் மனநல நிபுணர்களால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, இராணுவத்தில் உளவியல் சுகாதார சவால்களை அடையாளம் காணவும், நிர்வகிக்கவும் தடுக்கவும் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளிடையே விழிப்புணர்வு மற்றும் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது. மன அழுத்தம் தொடர்பான நிலைமைகளை முன்கூட்டியே அங்கீகரிப்பது மற்றும் சுய-தீங்கு மற்றும் தற்கொலை அபாயத்தைக் குறைப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை வலியுறுத்தப்பட்டன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் தனது நிறைவுரையில் உளவியல் நல்வாழ்வை மேம்படுத்துவதில் பணிப்பகத்தின் முயற்சிகளைப் பாராட்டியதுடன் மேலும், மன உறுதியைப் பராமரிக்க நிலையான விழிப்புணர்வு மற்றும் நிறுவன ஆதரவின் அவசியத்தை எடுத்துரைத்தார்.