இராணுவத்தினரால் புனானியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் திட்டம்

23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.பீ.பீ. குலதிலக்க என்டிசீ அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய படைப்பிரிவின் படையினர் 2026 ஏப்ரல் 20 ஆம் திகதி புனானி பஞ்ச மகா விகாரையில், புனானியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் திட்டத்தை நடாத்தினர்.

இந்த நிகழ்ச்சியின் போது, ரூ. 2,500.00 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் 90 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. ‘மனிதநேய நிவாரண யாத்திரை’ தொடரின் 37-வது கட்டத்தை முன்னிட்டு, அதஹித நிறுவனர் திரு. பிரசாத் லொகுபாலசூரிய அவர்கள் இந்த திட்டத்திற்கான நிதியுதவியை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், வைத்தியர் அமில நலிந்த சில்வா, வைத்தியர் நதீர ஜயவர்தன மற்றும் புனானி கிராமத்தைச் சேர்ந்த பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.