இராணுவத்தினரால் பாடசாலை உபகரணங்கள் நன்கொடை

கோட்டே ஸ்ரீ கல்யாணி சமக்ரி தர்ம மகா சபையின் 170 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தர்ம யாத்திரை முயற்சியின் ஒரு பகுதியாக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது காலாட் படைப்பிரிவின் படையினர், யாழ். புத்தூர் மதிஹே பன்னாசிஹா வித்தியாலயத்தில் 2025 நவம்பர் 12 ஆம் திகதி மதிஹே பன்னாசிஹா வித்தியாலயம் மற்றும் உடுவில் முருகமூர்த்தி வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த நிகழ்வின் போது, 106 மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகள், புத்தகங்கள், பாடசாலை பைகள், காலணிகளுக்கான வவுச்சர்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

51 வது காலாட் படைப்பிரிவினரால் அதிகாரிகள் உணவு விடுதியில் மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்யதனர்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.