இராணுவத்தினரால் கலுகலேயில் எழுதுபொருட்கள் விநியோகம் திட்டம்

கலுகலே விஜய பராக்கிரம கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு 2025 டிசம்பர் 27, அன்று கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினரால் பாடசாலை எழுதுபொருட்கள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.பீ.பீ. குலதிலக்க என்டியூ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மெல்வா குரூப் (தனியார்) நிறுவனம் மற்றும் வைட் விஷன் அமைப்பின் நிதி உதவியுடன் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. 12 வது கெமுனு ஹேவா படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் படையினர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.