இராணுவத்தினரால் சிவனொளிபாதமலை வீதியின் கட்டுமானப் பணிகள் நிறைவு

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலில் பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் மேற்பார்வையில் இராணுவ படையினர் 2026 ஜனவரி 05 ஆம் திகதி சிவனொளிபாதமலை வீதியின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தனர்.

இத்திட்டம் 2025 டிசம்பர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. தூய இலங்கை திட்டத்தின் கீழ் அனைத்து கட்டுமானப் பொருட்களும் வழங்கப்பட்டன. 300 அடி நீளமுள்ள மீ.மி 300 கனவளவு கொண்ட பக்கச்சுவர், 90 அடி நீளமுள்ள மீ.மி 500 கனவளவு கொண்ட சுவர் மற்றும் தடுப்புச் சுவர் கட்டுதல் ஆகியவை இந்தப் பணியில் அடங்கும். மேலும் யாத்ரீகர்களின் மேம்பட்ட பாதுகாப்பிற்காக படிகட்டின் பாதுகாப்பு கைபிடி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர், பல இராணுவப் படையணிகளின் தினசரி உதவியுடன் நல்லதண்ணியிலிருந்து கட்டுமானப் பொருட்களைக் கட்டுமான பிரதேசத்திற்கு கொண்டு சென்றனர். இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையும் இந்த கூட்டு முயற்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கின.