இராணுவத்தினரால் அரச சாந்தி முதியோர் இல்லத்தில் தானம் வழங்கும் நிகழ்வு

எயர்மொபைல் பிரிகேடின் 32வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, பிரிகேட் படையினர் 2026 ஏப்ரல் 30 ஆம் திகதி சாலியபுர அரச சாந்தி முதியோர் இல்லத்தில் 260 முதியோர்களுக்கு தானம் வழங்கும் நிகழ்ச்சியை நடாத்தினர்.

மேலும், முதியோர் இல்லத்தின் வசதிகளை மேம்படுத்தவும் பராமரிக்கவும் அதன் வளாகத்தில் சிரமதானத் திட்டத்தையும் மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.