26th December 2025
543 வது காலாட் பிரிகேட் படையினர், 2025 டிசம்பர் 22 ஆம் திகதி மன்னார் கலாசார மண்டபத்தில் 142 ஏழை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை நடாத்தினர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சீ. அபேகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் கலந்து கொண்டார்.
மருத்துவ ஆலோசகர் வைத்தியர் ஜினஞ்சலா ஷானிகா விஜயகுணசேகர மற்றும் அவரது மகள் வைத்தியர் தருஷி தில்ஹார பெரேரா ஆகியோரால் பாடசாலை உபகரணங்களுக்கான நன்கொடை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிள்ளைகள் கலந்து கொண்டனர்.