16th November 2025
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கொழும்பு இராணுவ மருத்துவமனையில் 2025 நவம்பர் 14 ஆம் திகதி நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முயற்சியானது, இராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அப்பிரதேசத்தில் வசிப்பவர்களிடையே நீரிழிவு நோய் பற்றிய அறிவை மேம்படுத்துதல், அதன் தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துறைப்பதை நோக்கமாக கொண்டிருந்தது.
பங்கேற்பாளர்கள் நீரிழிவு முகாமைத்துவம் மற்றும் தடுப்பு குறித்த முக்கிய தகவல்களை பல ஆதரவான சுகாதார சேவைகளுடன் பெற்றனர்.