இராணுவத்தினால் இரத்த தான முகாம் ஏற்பாடு

6 வது (உதவிப்படை) இலங்கை கவச வாகன படையணியின் படையினர், திருகோணமலை பொது மருத்துவமனையின் இரத்தமாற்றுப் பிரிவுடன் இணைந்து 2026 மார்ச் 28 ஆம் திகதி இரத்த தான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

நாடு முழுவதும் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்வத்தி செய்யும் வகையில், தேசிய இரத்தத் தேவைக்கு ஆதரவளிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இராணுவ வீரர்கள் தாமாக முன்வந்து இரத்தம் தானம் செய்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுகாதாரத் துறையின் நலனுக்கான தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர்.