இராணுவத்தால் மனித உரிமைகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு சுவரெட்டி அறிமுகமும் செயலமர்வும்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ சுவரொட்டி வடிவமைப்பாளர்களுக்கான செயலமர்வு “தூய இலங்கை” திட்டத்தின் ஒரு பகுதியாக 2025 நவம்பர் 04 அன்று இராணுவத் தலைமையக LL3 வளாகத்தில் நடத்தப்பட்டது.

சர்வதேச மனித உரிமைகள் தினம் மற்றும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியந்த அபேசுந்தர அவர்களால் நடத்தப்பட்டது.

மொத்தம் 90 பங்கேற்பாளர்கள் நேரில் கலந்து கொண்டு, நிர்மாணிப்பு வடிவமைப்பு நுட்பங்கள், கருப்பொருள் சுவரொட்டி உருவாக்கம் மற்றும் பயனுள்ள காட்சி தொடர்பு உத்திகள் தொடர்பான நுணுக்கங்ளை பெற்றனர். அத்துடன் நாடு முழுதும் உள்ள பாதுகாப்பு படை தலைமையகங்கள், படைப்பிரிவுகள், பிரிகேட்கள், படையணிகள் மற்றும் படையலகுகள் உட்பட 328 இடங்களில் இருந்து சூம் தொழில்நூட்பத்தின் ஊடாக இச் செயலமர்வில் பங்கேற்றனர்.