இராணுவத் தளபதி ஜெனரல் தேசமான்ய டெனிஸ் பெரேராவின் 11வது நினைவு பேருரை நிகழ்த்தல்

ஜெனரல் தேசமான்ய டெனிஸ் பெரேரா அவர்களின் 11வது நினைவு பேருரை, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டகற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் 2025 ஆகஸ்ட் 11 அன்று நடைபெற்றது.

ஓய்வுபெற்ற கொடி தர அதிகாரியாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கே.பீ. அருண ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இலங்கைக்கான நேபாள தூதர் கலாநிதி. பூர்ணா பகதூர் நேபாளி இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் மேலும் மறைந்த ஜெனரல் டெனிஸ் பெரேராவின் குடும்ப உறுப்பினர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ சிறப்புமிக்க கூட்டத்தினருக்கான சொற்பொழிவை நிகழ்த்தினார்.

வருகை தந்த மரியாதைக்குரிய அழைப்பாளர்களை ஓய்வுபெற்ற கொடி தர அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான ஏர் சீப் மார்ஷல் ககன் புலத்சிங்கள (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்வீ எம்பீல் எம்எஸ்சீ எப்ஐஎம் (இலங்கை) என்டிசி பீஎஸ்சீ அவர்கள் வரவேற்றார்.

தேசிய கீதம் இசைத்தலின், பின்னர் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பாரம்பரிய மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன் அதன் பிறகு ஓய்வுபெற்ற கொடி தர அதிகாரிகள் சங்க தலைவர் மறைந்த ஜெனரல் டெனிஸ் பெரேராவின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்துடன் மறைந்த ஜெனரல் டெனிஸ் பெரேராவின் துணைவியார் திருமதி ரஞ்சினி பெரேரா மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

வரவேற்பு உரையை நிகழ்த்திய ஓய்வுபெற்ற கொடி தர அதிகாரிகள் சங்க தலைவர், இராணுவத் தளபதிக்கு மதிப்புமிக்க விரிவுரை பதக்கத்தை வழங்குவதற்கு முன்பு, பேச்சாளரை அறிமுகப்படுத்தினார். பின்னர் இராணுவத் தளபதி உரை நிகழ்த்தியதுடன் மறைந்த ஜெனரல் டெனிஸ் பெரேரா அவர்களின் சிறந்த சேவை, தலைமைத்துவம் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகளை நினைவு கூர்ந்தார்.

முறையான பிரிவின் நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான ஏர் வைஸ் மார்ஷல் கிஷன் யஹம்பத் (ஓய்வு) வீஎஸ்வீ யூஎஸ்பீ எம்எஸ்சீ பீஎஸ்சீ அவர்கள் நன்றி உரையாற்றினார். நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.