இராணுவத் தளபதி அவர்கள் பாதுகாப்புச் செயலாளரை மரியாதை நிமித்தம் சந்திப்பு

புதிய இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ (இரண்டு பார்கள்) ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, எம்எம்எஸ்சீ (மூலோபாய கற்கைகள் – சீனா) எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கைகள்) முகாமைத்துவம் எம்எஸ்சீ (பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள்) எப்என்டியூ (சீனா) பீஎஸ்சீ அவர்களை 2025 ஜனவரி 08 அன்று பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.

இராணுவத் தளபதியின் புதிய நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அவருக்கு அன்பான வரவேற்பை வழங்கினார். அவர்களின் கலந்துரையாடல் இணக்கமானதாகவும், அறிவு மிக்கதாகவும் இருந்தது, பகிரப்பட்ட முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட விடயங்களில் ஆழமாக ஆராயப்பட்டது. இந்த ஈடுபாட்டுடன் கூடிய பரிமாற்றம் அவர்களின் தொழில்முறை உறவை மேலும் வலுப்படுத்தியதுடன் ஒத்துழைப்புக்கான வலுவான அடித்தளத்தை வலுப்படுத்தியது.

கலந்துரையாடலின் இறுதியில், இராணுவத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு நினைவுச் சின்னம் வழங்கி புதிய நியமனத்திற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் வருகையின் நினைவாக நினைவுச்சின்னம் ஒன்றினை இராணுவ தளபதிக்கு வழங்கினார்.