5th June 2025
உலக சுற்றாடல் தினத்தைக் குறிக்கும் வகையில், தூய இலங்கை திட்டத்திற்கு இணங்க, 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்' என்ற கருப்பொருளின் கீழ், 2025 ஜூன் 05, அன்று இராணுவத் தலைமையகத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முயற்சி சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான சமூகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டமையப்பட்டது. அதன்படி, 2025 மே 30 முதல் ஜூன் 05, வரையிலான வாரம் சுற்றாடல் வாரமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான உறுதிப்பாட்டை அடையாளப்படுத்தும் வகையில், இராணுவத் தலைமையகத்தின் இலகுரக வாகன தரிப்பிடத்தில் தளபதி ஒரு 'இழுப்பை' கன்றை நட்டினார்.
இந்த முயற்சிக்கு இணையாக, இராணுவத் தலைமையகத்தைச் சுற்றியுள்ள நீர் உணர்திறன் பகுதிகளைப் பாதுகாக்க கூடுதல் ' இழுப்பை ' மரங்கள் நடப்பட்டன.
இந்த முயற்சியை மேலும் ஆதரித்து, அலையன்ஸ் பைனான்ஸ் தனியார் நிறுவனம் 20,000 தெங்கு மற்றும் மா கன்றுகளை நன்கொடையாக வழங்கியது, அவற்றில் 500 கன்றுகள் நிகழ்வின் போது அடையாளமாக ஒப்படைக்கப்பட்டன. இந்த மரக்கன்றுகளை இராணுவத் தளபதி முறையாக அந்தந்த படைப்பிரிவு நிலையங்களின் பிரதிநிதிகளுக்கு இராணுவ நிறுவனங்கள் முழுவதும் மேலும் நடுவதற்காக வழங்கினார்.