21st April 2026
புத்தல இராணுவப் போர்க் கல்லூரி, 2026 ஆம் ஆண்டின் முதல் பாடநெறிக்கான பட்டமளிப்பு விழாவை 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி இராணுவப் போர்க் கல்லூரியில் கலையரங்கில் நடாத்தியது.
இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட மொத்தம் 143 மாணவ அதிகாரிகள், சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி எண் 16 மற்றும் கனிஷ்ட கட்டளைப் பாடநெறி எண் 35 ஆகியவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். குறிப்பிடத்தக்க வகையில், இந்தப் பாடநெறியில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டு அதிகாரிகளும் பங்கேற்றனர். இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.ஆர்.என். சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் சிறந்த அதிகாரிகளுக்கு சான்றிதழ்களும் சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.
16 வது சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி
தகுதி வரிசையில் முதலிடம்: இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஆர்.ஆர்.ஐ.ரொட்ரிகோ பீஎஸ்சீ
தகுதி வரிசையில் இரண்டாமிடம்: இலங்கை இராணுவ மகளிர் படையணியின் மேஜர் எல்.கே.கே. பெரேரா எல்எஸ்சீ
தகுதி வரிசையில் மூன்றாம் இடம்: இலங்கை பீரங்கி படையணியின் மேஜர் கே.ஏ.இ.எஸ். கஸ்தூரியாராச்சி பீஎஸ்சீ ஐஜீ
சிறந்த சேவைக் கடிதம் : இலங்கை பீரங்கி படையணியின் மேஜர் கே.ஏ.இ.எஸ். கஸ்தூரியாராச்சி பீஎஸ்சீ ஐஜீ
சிறந்த சம்பவ ஆய்வு: பொறியியல் சேவைகள் படையணியின் மேஜர் டி.ஏ.என்.எ. தூவேராச்சி பீஎஸ்சீ
35 வது கனிஷ்ட கட்டளைப் பாடநெறி
தகுதி வரிசையில் முதலிடம்: இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் எச்.எம்.எச். செனரத்ன
தகுதி வரிசையில் இரண்டாமிடம்: இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் மேஜர் எம்.எம்.ஜி. மாபுலகே
தகுதி வரிசையில் மூன்றாமிடம்: பொறியியல் சேவைகள் படையணியின் மேஜர் எச்.ஜி.எஸ். விரங்க