இராணுவ வழங்கல் பாடசாலையினால் 2025 ம் ஆண்டுக்கான வழங்கல் தொடர்பான கருத்தரங்கு

இராணுவ வழங்கல் பாடசாலை, "எதிர்கால வழங்கல் நிலையமாக திருகோணமலையின் சாத்தியக்கூறுகள்: ஆற்றல், தகவமைப்பு, நிலைத்தன்மை, உகந்த பயன்பாடு மற்றும் பிரச்சினைகள்" என்ற கருப்பொருளின் கீழ், 2025 செப்டம்பர் 10 அன்று இரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான தனது வருடாந்த வழங்கல் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். கலாசார நிகழ்ச்சிகளுடன் கருத்தரங்கு ஆரம்பமாகியது, அதனைத் தொடர்ந்து கருத்தரங்கு குறித்த அறிமுக வீடியோ திரையிடப்பட்டது.

இராணுவ வழங்கல் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ஆர்.டி. லொக்கதொட்டஹேவா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தினார். அதன் பின்னர் இராணுவத் தளபதி உரையாற்றினார். வைத்தியர் சனத் திவாகர வணிக நிர்வாக கலாநிதி, பொறியியல் முதுகலைப் பட்டம், வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம், பொறியியல் இளங்கலை, ஏஎம்ஐஇ (இலங்கை) எம்ஐஎஸ்எம்எம் அவர்கள் முக்கிய உரையை நிகழ்த்தினார். இந்த கருத்தரங்கு இரண்டு அமர்வுகளாக நடாத்தப்பட்டதுடன், பினவரும் விடயங்கள் இதில் கவனம் செலுத்தப்பட்டது:

• திருகோணமலையில் இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்களுக்கான நிலையான விநியோகச் சங்கிலி உத்திகள்: செயற்திறன் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பை மேம்படுத்துதல்.

• திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுலாத் துறையில் உள்ள வழிகளை ஆராய்வதற்காக இராணுவ ஆற்றலை திறம்பட பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு பங்களித்தல்.

திருகோணமலையின் வழங்கல் நிலையமாக இருக்கும் திறனை ஆராய்தல், நிலையான விநியோகச் சங்கிலி நடைமுறைகளை ஊக்குவித்தல், தேசிய வளர்ச்சிக்கு இராணுவ பங்களிப்பை ஆராய்தல், கல்வி மற்றும் தொழில்முறை ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் புதுமை மற்றும் அறிவுப் பகிர்வை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களின் கீழ் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

நிகழ்வின் ஒரு பகுதியாக, வழங்கல் சஞ்சிகை 2025 உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவ வழங்கல் பாடசாலையின் உறுப்பினர்கள் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.