30th August 2025
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில், இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலை 2025 ஆகஸ்ட் 29 ஆம் திகதி நிர்வாக உதவியாளர் பாடநெறி எண். 91 முதல் 95 வரை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு தேசிய தொழிற்கல்வித் தகுதி (NVQ) சான்றிதழ்களை வழங்கியது.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அழைக்கப்பட்ட பிரமுகர்களால் பயிற்சியாளர்களுக்கு தேசிய தொழிற்கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள் பல கட்டங்களாக வழங்கப்பட்டன.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.