3rd July 2025
இராணுவத் தலைமையகத்தில் 2025 ஜூலை 03 அன்று இடம்பெற்ற இராணுவ நல நிதியிலிருந்து நிதி உதவி வழங்கும் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார்.
வருகை தந்த இராணுவத் தளபதியை இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை விளக்கும் அறிமுக காணொளியுடன் நிகழ்வு ஆரம்பமாகியது.
விளக்கக்காட்சியைத் தொடர்ந்து, இராணுவ தளபதி, பதவி நிலை பிரதானி மற்றும் பிரதி பதவி நிலை பிரதானியுடன் இணைந்து அனைத்து படையணிகளின் பிரதிநிதிகளுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கினார்.