இராணுவ தளபதியை ரஷ்ய இராணுவ தூதுக்குழு சந்திப்பு

ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புக்கான முதன்மை பணிப்பகத்தின் துணைத் தலைவர் மேஜர் ஜெனரல் அலெக்சாண்டர் இவனோவிச் ஜின்சென்கோ அவர்கள் தனது தூதுக்குழுவுடன், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் – என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஜனவரி 27 அன்று இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்தக் குழுவில் கேணல் ரோமன் செர்ஜியேவிச் மேட்டிட்சின், லெப்டினன் கேணல் அலெக்சாண்டர் ஒலெகோவிச் பனசென்கோவ், கேப்டன் 2வது தரவரிசை டெனிஸ் அனடோலிவிச் கிளீவ், மேஜர் அன்டன் விக்டோரோவிச் ஜுய்கோவ், முதல் லெப்டினன் டிமிட்ரி அலெக்ஸாண்ட்ரோவிச் சுசென் மற்றும் இலங்கையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் கேணல் செர்ஜி என் பெலியான்கின் ஆகியோர் அடங்குவர்.

இக் கலந்துரையாடலின் போது, இராணுவத் தளபதி தூதுக்குழுவுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், அந்தந்த நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவும் நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிதல் பிணைப்புகளை சுட்டிக்காட்டினார்.

இந்த சந்திப்பின் முடிவில், இலங்கை இராணுவத்தினரின் நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுப் பரிசுகள் பரிமாறி கொள்ளப்பட்டன.