இராணுவ பதவி நிலை பிரதானிக்கு இராணுவ மரியாதை

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு 2025 ஜூன் 23 ஆம் திகதி இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பிரியாவிடை அளிக்கப்பட்டது.

வருகையின் போது சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகத்தினால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர், கஜபா படையணி படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

சம்பிரதாய நிகழ்வுகளைத் தொடர்ந்து, வெளிச்செல்லும் இராணுவ பதவி நிலைப் பிரதானி குழுப்படம் எடுத்துக் கொண்டார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.