தித்வா புயலைத் தொடர்ந்து, மஹாகிரிதெம்ப வழியாக சிவனொலிபாத மலைக்கு செல்லும் முக்கிய பாதை மண்சரிவு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் மஹாகிரிதெம்பவில் உள்ள படிக்கட்டுக்கள் பக்தர்களின் வழிபாட்டிற்கு பாதுகாப்பற்றதாக மாறியது. 2025 டிசம்பர் 04 அன்று சிவனொலிபாத மலை யாத்திரை காலம் ஆரம்பமாகிய போதிலும், பாதையின் இந்தப் பகுதியில் பக்தர்கள் வழிபாட்டிக்கு சிரமங்களை எதிர்கொண்டனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சேதமடைந்த படிக்கட்டுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை படையினர் ஆரம்பித்தனர். பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் முதற்கட்ட பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றதுடன் படையினர் மலையடிவாரத்திலிருந்து மேல் பகுதிகளுக்கு அத்தியாவசிய கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்வதில் ஈடுபட்டுள்ளனர்.