7th September 2025
இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகத்தினால் 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்புடன் விழிப்புணர்வு விரிவுரை நடாத்தப்பட்டது.
இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டி.ஜீ.என்.டி. சில்வா அவர்கள், இராணுவ வீரர்களின் நலன் மற்றும் நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் நிதியத்தின் பங்கை விளக்கி, அதன் நன்மைகள், நடைமுறைகள் மற்றும் சரியான ஆவணங்களின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
இந்த நிகழ்வில், பங்கேற்பாளர்களுக்கு உறுப்பினர் மற்றும் கட்டண அமைப்புகளுடன் தொடர்புடைய பிரச்சினைகள் தெளிவுபடுத்தப்பட்டன. இதன் மூலம், நிதியத்தின் செயற்பாடுகள் குறித்து அவர்களின் புரிதல் மேம்பட்டது.