30th July 2025
இராணுவ நலன்புரி நிதி பணிப்பகம், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம், முதலாம் படை மற்றும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் ஆகியவற்றில் தொடர்ச்சியான விழிப்புணர்வு விரிவுரைகளை நடாத்தியது.
இந்த அமர்வுகளை இராணுவ நலன்புரி நிதி பணிப்பகத்தின் பணிப்பாளர் கேணல் டி.ஜீ.என். டி சில்வா அவர்கள் நடாத்தினார். இராணுவ நலன்புரி நிதி பணிப்பகத்தின் சேவைகள், நலன்புரி திட்டங்கள், அணுகல் நடைமுறைகள் மற்றும் கட்டண முறை ஆகியவற்றில் கவனம் செலுத்தின. உறுப்பினர் முகாமை, பொதுவான விண்ணப்ப நிராகரிப்புகள் மற்றும் துல்லியமான ஆவணங்களின் தேவை போன்ற முக்கிய நிர்வாக விடயங்களையும் பணிப்பாளர் எடுத்துரைத்தார்.
மேலும் வெளிப்படைத்தன்மை மற்றும் செயற்திறனுக்கான இராணுவ நலன்புரி நிதி பணிப்பகத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி, அனைத்து பணியாளர்களும் நிதியின் நன்மைகளை முழுமையாகப் பயன்படுத்துமாறு அவர் ஊக்குவித்தார். இந்த விரிவுரைகள், பங்கேற்பாளர்கள் கேள்விகளை எழுப்பவும் இராணுவ நலன்புரி நிதி பணிப்பகத்தின் சேவைகள் குறித்த அவர்களின் புரிதலை மேம்படுத்தவும் ஒரு தளமாக அமைந்தது.