16th May 2026
இராணுவ சேவை வனிதையர் பிரிவு, 2026 மே 15 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில், இராணுவத்தினர் மற்றும் சிவில் ஊழியர்களுக்காக ஒரு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை நடாத்தியது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இந்தத் திட்டத்தின் போது, நான்கு இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு சிவில் ஊழியருக்கு புதிய வீடுகள் கட்டுவதற்காக, தலா 1,000,000.00 ரூபாய் வீதம், மொத்தமாக 5,000,000.00 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், 19 இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு சிவில் ஊழியருக்கு, புதிய வீடுகள் மற்றும் பகுதியளவு கட்டப்பட்ட வீடுகளின் கட்டுமானத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் வீட்டு வசதி உதவி வழங்கப்பட்டது. மொத்தமாக, இராணுவ சேவை வனிதையர் பிரிவு, வீட்டு வசதித் திட்டங்களுக்காக 9.8 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியது.
மேலும், மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் இராணுவ வீரர் ஒருவரின் பிள்ளைக்கு கொழும்பு ரொட்டரி கழகத்திடமிருந்து பெறப்பட்ட ரூ. 2,87,500.00 பெறுமதியான மின்சார சக்கர நாற்காலியும், மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் மற்றொரு இராணுவ வீரரின் இரட்டைக் குழந்தைகளுக்கு ரூ. 4,30,000.00 பெறுமதியான மின்சார முச்சக்கர வண்டியும் நன்கொடையாக வழங்கப்பட்டன. மேலும், மூன்று இராணுவ வீரர்களுக்கு 54,900.00 ரூபாய் பெறுமதியான மூன்று நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களும், ஒரு சிவில் ஊழியருக்கு 33,249.00 ரூபாய் பெறுமதியான ஓவர்லாக் தையல் இயந்திரமும் நன்கொடையாக வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற இராணுவ மாற்றுத்திறனாளி வீரரின் இரண்டு பிள்ளைகளுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.