7th August 2025
இராணுவ வீரர்களிடையே தலைமைத்துவத் திறன் முடிவு எடுபதில் மனித திறன்களை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, 'மனித காரணி' குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவு 2025 ஆகஸ்ட் 01 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த அமர்வு இராணுவத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் ஜெனரல் மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்என்கேடி பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்பட்டது.
இந்த விரிவுரை ஜெர்மன்/ஆஸ்திரிய கூட்டு நிறுவனத்தின் பிராந்தியத் தலைவர்/முகாமைதுவ பணிப்பாளர் திரு. செனரத் ஜயசேகர மின்ட்ஸி, எம்ஏவீ, பிஏவீஎம்ஜிஎம்டீ, எப்ஆர்ஏஈஎஸ் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
இந்த அமர்வு, குறிப்பாக உயர் அழுத்த செயற்பாட்டு சூழல்களில், தலைமைத்துவத்தில் மனித நடத்தை, தனிப்பட்ட இயக்கவியல் மற்றும் உளவியல் தயார்நிலை ஆகியவற்றைப் புரிந்துகொள்வதன் முக்கிய பங்கை வலியுறுத்தியது.
இராணுவத்தின் பல்வேறு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 150 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்வின் இறுதியில், இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் விருந்தினர் பேச்சாளருக்கு பாராட்டுச் சின்னம் வழங்கி, இராணுவ அதிகாரிகளின் தொழில்முறை வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகள் மற்றும் பங்களிப்பை பாராட்டினார்.