இந்திய கடற்படை பதவிநிலை பிரதானி மரியாதை நிமித்தமாக இராணுவத் தளபதியை சந்திப்பு

இந்திய கடற்படை பதவிநிலை பிரதானி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி பீவீஎஸ்எம் எவீஎஸ்எம் என்எம் சீஎன்எஸ், இந்திய கடற்படைத் தலைவர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் - இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், சீஎன்எஸ் இன் எஸ்ஒ கெப்டன் அஸ்வானி கே ஹான்ஸ், சீஎன்எஸ் இன் என்எ கெப்டன் ஆதித் பத்நாயக், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி எஸ்எம் மற்றும் கொமாண்டர் நிதின் பாபு (சீடிஆர் –எப்சீ) ஆகியோர் அடங்கிய குழுவுடன், 2025 செப்டெம்பர் 22, அன்று இராணுவத் தலைமையகத்தில் தளபதி அலுவலகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.