இலங்கைக்கான ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலைக்கு விஜயம்

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமண்டா ஜான்ஸ்டன், உதவி பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் கிறிஸ் போவ்லர் அவர்களுடன் இணைந்து, எம்பிலிப்பிட்டிய இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலைக்கு 2025 ஆகஸ்ட் 11 ஆம் திகதி உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டனர்.

வருகை தந்த அவர்ளை இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலையின் தளபதி கேணல் ஜேஏசீஎஸ் ஜகொட பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். பின்னர், இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலையின் தளபதி இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவில் போர் பொறியியல் நடவடிக்கைகள் குறித்த விரிவான விளக்கத்தை வழங்கினார். பகிரப்பட்ட நடைமுறைகள் மற்றும் தனித்துவமான தேவைகளை எடுத்துக்காட்டினார். ‘F3 மைன் லேப்’ டிடெக்டர்கள் மற்றும் பரஸ்பர பயிற்சி பரிமாற்றங்களுக்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினர்.

நினைவுப் பரிசில்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் இந்த விஜயம் நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.