25th June 2025
இலங்கை பொறியியல் படையணியில் வெளிசெல்லும் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு 2025 ஜூன் 22 ம் திகதி பனாகொடை படையணி தலைமையகத்தில் தலைமைத்துவம் மற்றும் சேவையின் சிறப்புமிக்க அத்தியாயத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில், பிரியாவிடை வழங்கப்பட்டது.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை நிலைய தளபதி அன்புடன் வரவேற்றதை தொடர்ந்து பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டார். பின்னர் அவர் படையணி நினைவு தூபியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, அணிவகுப்பு சதுக்கத்தில் மரியதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் சப்பர் அதிகாரிகளுடன் குழு படம் எடுத்துகொண்டார். பின்னர் அனைத்து நிலையினருடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார். இறுதியில் படையணியின் படையினர் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு தங்கள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.
அன்றைய நிகழ்வுகள் சப்பர் அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைவர்கள் கலந்து கொண்ட பிரியாவிடை இரவு உணவோடு நிறைவடைந்தது. நிகழ்வின் போது, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் பிரியாவிடை உரையை நிகழ்த்தினார். பின்னர் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி தனது இராணுவ வாழ்க்கை முழுவதும் உறுதியான ஆதரவு, விசுவாசம் மற்றும் தோழமைக்காக அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். தனது மூத்தவர்கள், சகாக்கள் மற்றும் கீழ் பணிபுரிபவர்களிடமிருந்து பெறப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் ஊக்கத்திற்கு அவர் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.