20th February 2025
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் 80 ஆம் ஆண்டு விழா கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி தெல்கொட டெமரின் பென்கியுட் மண்டபத்தில் நடைபெற்றது.
மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 1944 ம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை முன்னாள் படைவீரர் சங்கமானது, 48 ஆயுதப்படைகளின் சங்கங்களுடன் இணைந்து 45,000 க்கும் மேற்பட்ட முப்படை உறுப்பினர்களை கொண்டுள்ளது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
பிரதி அமைச்சர், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், ஓய்வுபெற்ற போர்வீரர்களின் நலனுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். ஓய்வுபெற்ற படைவீரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட குழுவின் முயற்சிகள் தொடர்பாக உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அச்சந்தர்ப்பத்தில், முன்னாள் படைவீரர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு பொப்பி மலர்கள் விற்பனையிலிருந்து அதிக தொகையை நன்கொடையாக வழங்கிய கஜபா படைவீரர் சங்கத்திற்கு ஊக்கத்தொகையாக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலை இந்நிகழ்வின் போது பிரதி அமைச்சரினால் வழங்கப்பட்டது. மேலும், புகழ்பெற்ற உறுப்பினர்கள் தங்கள் நீண்டகால அர்ப்பணிப்புக்காக வாழ்நாள் உறுப்பினர் பதக்கம் மற்றும் கௌரவ சேவை பதக்கத்தைப் பெற்றனர்.
இந்த நிகழ்வில் முன்னாள் படைவீரர் சங்கத்தின் செயலாளர் கேணல் சுஜித் ஜயசேகர (ஓய்வு) மற்றும் முன்னாள் படைவீரர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.