24th October 2025
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களால் பழுதடைந்த இராணுவ வாகனங்கள், முழுமையாக பாவனைக்கு உகந்த வகையில் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. மின் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் வேலைத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்க்கும் பணிகள், புதிய வாகனங்களை வாங்குவதற்கு செலவிடப்பட வேண்டிய பெரும் தொகையை இராணுவத்திற்கு மீதப்படுத்தியுள்ளது.
2025 ஒக்டோபர் 24 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது, புதுப்பிக்கப்பட்ட வாகனங்கள், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களால் அந்தந்த படையணியின் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டன.
மறுசீரமைக்கப்பட்ட வாகனங்களில் டாடா 1313 மற்றும் 1613 இருபத்தி ஆறு லொரிகள், 709 டாடா 15 லொரிகள், 14 பேருந்துகள், ஒரு யூனிகார்ன் தண்ணீர் பவுசர், ஒரு யூனிபபெல், இரண்டு கழிவுநீர் பவுசர்கள், ஐந்து கெப்கள், ஆறு ஆம்புலன்ஸ்கள், நான்கு வேன்கள், ஒரு கேன்டர் லொரி மற்றும் ஒரு கார் ஆகியவை அடங்கும்.
மேலும், இலங்கை பீரங்கி படையணிக்கு 10 உயர்ந்த இரும்பு லொரிகளும், விஷேட படையணிக்கு 8 DRZ 400 மோட்டார் சைக்கிள்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.